ராணிப்பேட்டை: மாதத்தவணை செலுத்த 2 நாட்கள் தாமதம்... பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்?

ஆற்காடு நகரத்தில் மாதத் தவணை செலுத்தவில்லை எனக் கூறி இரவு நேரத்தில் பெண்களை ஒருமையில் பேசி அடாவடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்.
பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்
பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்pt desk
Published on

செய்தியாளர்: சரத்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காயக்கார தெரு பகுதியைச் சேர்ந்த மோகனாம்பாள் (40) என்பவர், தனது மாமியார் கல்யாணி என்பவருக்கு ஆற்காடு பகுதியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக 8 மாதங்களுக்கு முன்பு ரூ.67,000 மகளிர் லோன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்காக மாதத் தவணையாக 3,490 ரூபாயை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்
பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்pt desk

இந்நிலையில் இம்மாதம் 13-ஆம் தேதி அன்று கட்டவேண்டிய லோன் தொகையை குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்களாக கட்டாமல் இருந்துள்ளார். இதையடுத்து முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் லோன் வசூல் செய்யும் கார்த்திகேயன் என்பவர் கடன் தொகையை வசூல் செய்வதற்காக 16-ஆம் தேதி மாலை கல்யாணி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாலை 6 மணி முதல் 8 மணி வரை கல்யாணியின் வீட்டின் முன்பாக நின்று தரக்குறைவாகவும் அங்கு உள்ள பெண்களை ஒருமையிலும் அவர் பேசியதாக தெரிகிறது.

பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்
காஞ்சிபுரம்: 7 மாத குழந்தை தொண்டையில் சிக்கிய தைல டப்பா.. பாதுகாப்பாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!

இதனால் அச்சமடைந்த பெண்கள் இது குறித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்களை ஒருமையில் பேசிய அந்த ஊழியரிடம் தொலைபேசி எண் மற்றும் முகவரியை வாங்கிக் கொண்டு காலையில் ஆற்காடு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்றுகூறி சம்பவ இடத்திலிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com