“ராமபிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்; நாடு ராமர் மயமாகி வருகிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது என்று திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிததார்.
Governor RN Ravi
Governor RN Ravipt desk
Published on

செய்தியாளர்: வி.சார்லஸ்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அங்கு அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து ரங்கநாதர் சந்நிதி மற்றும் தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார் ஆளுநர் ரவி.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனைவியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனைவியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிpt desk

அதன் பின்னர் தாயர் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்...

“நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளன. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது.

மனைவியுடன் சேர்ந்து கோயிலை சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
மனைவியுடன் சேர்ந்து கோயிலை சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவிpt desk

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமபிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும் பங்குண்டு. தூய்மைப் பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com