“ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள்” - சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

“மோடி முகத்தை பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள்” என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்CPIM Tamilnadu | Instagram
Published on

செய்தியாளர்: ராஜ்குமார்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 78வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிங்காரவேலர் நினைவு நாளில் சிபிஐஎம்
சிங்காரவேலர் நினைவு நாளில் சிபிஐஎம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய விடுதலை போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த சிங்காரவேலரை நினைவு நாளில் அவரை நினைவு கூறுகிறோம். விடுதலை போராட்டம் உள்ளிட்ட அனைத்துக்கும் அவர் போராடினார். மகத்தான தலைவர், கம்யூனிச கொள்கையை தமிழ்நாட்டில் பரப்பிய மூத்த தலைவர். மே தினத்தை சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடியவர்.

சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
“உறுதியாக சொல்கிறோம்... பாஜகவுடன் கூட்டணி இல்லை” – குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்!

‘பாஜக வெற்றி - நாடே மோசமாகிவிடும்’

“இந்தியாவில் சாதி மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது. இந்தியாவில் மதவெறி சக்திகள் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்ற ஆபத்தான நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மதவெறி சக்திகள் கொக்கரிப்பது இந்திய மக்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். பாஜக வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாடும் மோசமாக மாறிவிடும்...”

Annamalai  | BJP
Annamalai | BJPfile

‘மோடி முகத்தை பார்த்தால் ஓட்டு கிடைக்காது என...’

“அண்ணாமலை பழைய இரும்பு சாமன் வியாபாரி போல கூவி கூவி விற்றாலும் அவருக்கு தமிழ்நாட்டில் முகவரி இருக்காது. மக்களை பிளவுபடுத்தும் அரசியலை பயன்படுத்தி நாட்டை காப்பாற்றலாம் என்று பாஜக பார்க்கிறது. மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் பாஜகவினர் ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள்

‘திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை’

“பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் திமுகவுடன் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். பேச்சுவார்த்தையின் முடிவு சுமூகமாக அமையும்”

“அத்வானிக்கு ஆறுதல் பரிசு, பாரத ரத்னா”

“கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், ஆளுநர்களால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது. அத்வானியை ராமர் கோவிலுக்கு அழைக்கவில்லை என்பதால் அத்வானிக்கு ஆறுதல் பரிசாக பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com