தமிழகமே மழையின்றி வறட்சியில் தவிக்கும்போது, காலம் காலமாக தண்ணியில்லா காடு என்று வர்ணிக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. 100 சதவிகித வறட்சி என்று மத்தியக்குழு அறிவித்த இந்த மாவட்டத்தில் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே அரிதானதாக இருக்கிறது.
கடலாடி அருகே உள்ள கிடாக்குளம் கிராமத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இது வழக்கமான காட்சியாகிவிட்டது. தடுப்பு வேலி இல்லாத முப்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் மணிக் கணக்கில் காத்திருக்கிறார்கள் பெண்கள். அதில் ஊற்றெடுக்கும் நீரை எடுத்து வருவது இந்த ஊர் பெண்களின் தினசரி வேலைகளில் ஒன்றாக இருக்கிறது.