ராமநாதபுரம் | கொடிக் கம்பங்களை அகற்றும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து போலீஸ் எஸ்ஐ பரிதாப மரணம்!

ராமநாதபுரம் அருகே கொடிக் கம்பங்களை அகற்றிய போது மின்சாரம் தாக்கி துணை காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் எஸ்ஐ-க்கு நேர்ந்த பரிதாபம்
போலீஸ் எஸ்ஐ-க்கு நேர்ந்த பரிதாபம்pt desk
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் சரவணன் (36). இவர், பரமக்குடி நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பரமக்குடி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக் கம்பங்களை அகற்றிய போது அருகில் இருந்த மின்சார கம்பி மீது கொடிக்கம்பம் உரசியுள்ளது. இதில், எஸ்.ஐ, சரவணன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் எஸ்ஐ-க்கு நேர்ந்த பரிதாபம்
இந்திரா காந்தியின் நினைவு நாள்.. மலரஞ்சலி செய்த ராகுல் காந்தி!

இதைத் தொடர்ந்து உயிரிழந்த எஸ்,ஐ சரவணனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com