ராமநாதபுரத்தில் கால்நடைகளை அம்மை நோய் தாக்கிவருவதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பபட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கிவருகிறது. அங்கு ஒருசில மாடுகள் அவ்வபோது இறந்து வருகின்றன.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே இதற்கு கால்நடை மருத்துவர்கள் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் கால்நடைகளுக்கு சிகிச்சையும் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.