ராமமோகன ராவிற்கு மீண்டும் பொறுப்பு

ராமமோகன ராவிற்கு மீண்டும் பொறுப்பு
ராமமோகன ராவிற்கு மீண்டும் பொறுப்பு
Published on

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இவருடைய வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள இவருடைய அறையிலும் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து ராம மோகனராவ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ராமமோகன ராவிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com