நிலுவையில் இருக்கக்கூடிய மசோதாக்கள் மற்றும் இதர பணிகளை விரைந்து நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் “பதினைந்தாவது நாடாளுமன்றக் குழுவில் செய்து முடித்திருக்க வேண்டிய பணிகள் கூட இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது , நிச்சயமாக நாட்டு மக்கள் நம்மை கேள்வி கேட்பார்கள் எனவே நான் பாக்கி வைத்துள்ள பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என வெங்கையா நாயுடு கூறினார்.
மக்களவையில் ஏராளமான பணிகள் உடனடியாக செய்து முடிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் நம்மால் ஏன் அதை செய்ய முடியவில்லை என யோசிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “எலெக்ஷன், கலெக்ஷன் எல்லாம் முடிந்து விட்டது. நாம் டிஸ்கஷனுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் கலந்து பேசி அவை சுமூகமாக நடைபெறவும் பணிகளை விரைந்து முடிக்கவும் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெங்கைய நாயுடு கோரிக்கை வைத்தார்..