பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு வகை செய்யும் அமைச்சரவையின் பரிந்துரை, இன்று மாலைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் 161-ன் கீழ் 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
Read Also -> ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
இதன்படி எழுவர் விடுதலை தொடர்பான அரசின் பரிந்துரையானது இன்று மாலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.