புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து பெங்களூர் சென்ற ரஜினிகாந்த் அவரது சகோதரர் சத்திய நாராயணனிடம் ஆசி பெற்றார். பின்னர், பிறந்த நாளை அங்கேயே முடித்துவிட்டு அப்படியே 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவதாக ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில், அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனுடன் ராகவேந்திர மண்டபத்தில் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது புதிய கட்சியை எங்கு தொடங்குவது, மாநாட்டை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, போஸ்டரில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், சுதாகர் புகைப்படம் இடம்பெறக்கூடாது என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.