ரஜினி நிர்வாகிகளை சந்திப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - கனிமொழி

ரஜினி நிர்வாகிகளை சந்திப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - கனிமொழி
ரஜினி நிர்வாகிகளை சந்திப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - கனிமொழி
Published on

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் முதலமைச்சர் பழனிசாமி கடும் தோல்வியை சந்திப்பார் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தொடங்கினார். கொங்கணா புரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல், புதுப்பாளையத்தில் விவசாயிகள் சந்திப்பு, வனவாசியில் நெசவாளர் சந்திப்பு, இருப்பாளி பகுதியில் பனை தொழிலாளர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கனிமொழி ஜலகண்டபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடி பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அமல் படுத்தும் மத்திய அரசு தற்போது விவசாய சங்கங்களை அழைத்து பேசுவதாக கூறுவது வெறும் கண் துடைப்பு என்றும் நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமாக தற்போது நடைபெற்று வரும் நிலையில்,மத்திய அரசு வேளாண் மசோதா குறித்து முன்கூட்டியே விவசாய சங்கங்களை அழைத்து பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகள் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி இந்த சந்திப்பால் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்று கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com