“ஏமாற்றம்தான்; ஆனால், என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும்” - கமல்ஹாசன்

“ஏமாற்றம்தான்; ஆனால், என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும்” - கமல்ஹாசன்
“ஏமாற்றம்தான்; ஆனால், என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும்” - கமல்ஹாசன்
Published on

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாகாரர்கள்தான். மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும் போது தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது எனபதை உணர்த்துகிறது.” என்றார்.

நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமல் அரசியலில் வேண்டுமானால் பெரியவராக இருக்கலாம். ஆனால் அரசியலில் ஜீரோ என விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com