ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் சோதனை முயற்சி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டு வருகிறது, இதற்காக பல்வேறு விதமான இயந்திரங்கள் கையாளப்படுகின்றன. இந்த நிலையில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது.
பத்து லிட்டர் கிருமி நாசினியுடன், 100 மீட்டர் உயரத்திற்கு பறந்து மேலிருந்து தெளிக்கும் தன்மை கொண்ட இந்த ட்ரோன்களை முதற்கட்டமாக மருத்துவமனைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். 14 நிமிடங்கள் கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கும் வகையில் ஆற்றல் படைத்த இந்த ட்ரான் தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கக் கூடிய திறன் படைத்தது.
இதனிடையே கோரோனா தடுப்பு மருந்து தெளிக்கும் ட்ரோன் சிறிய ரக விமானத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.