புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய கும்பல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் பெயரில் வடமாநில கும்பல் போலி முகநூல் கணக்கு தொடங்கி இருந்த நிலையில் அதனை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அருணா
மாவட்ட ஆட்சியர் அருணா pt web
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவரது பெயரில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் முகநூல் கணக்கு தொடங்கி அதில் மாவட்டம் சார்ந்த பதிவுகளையும் பதிவிட்டு இருந்தனர்.

#JUSTIN | புதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு – முடக்கம்
#JUSTIN | புதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு – முடக்கம்

ஆனால், அந்த முகநூல் பக்கத்தில் மாவட்ட ஆட்சியர் அருணாவின் பிறந்த தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் பலரும் சந்தேகமடைந்து இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அருணா
தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளில் 125 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! யாருடைய ஆட்சியில் எவ்வளவு நடந்தது?

இதுகுறித்து மாவட்ட காவல் துறையினருக்கும் தகவல்கள் வந்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

Fake id
Fake idpt desk

இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலியான முகநூல் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com