இலங்கைக்கு ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து குமரி கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த 2 தினங்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.