நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழை நாளை முதல் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வரும் 12 ஆம் தேதி வட மேற்கு வங்க கடலில் ஒரு தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் வரும் 13 ஆம் தேதி முதல் மழை மீண்டும் அதிகரிக்கும். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா லட்சத்தீவு கோவா கடலோர பகுதிகளில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.