கால்டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் கால்டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் முறையாக விசாரணை செய்யவில்லை என ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுனர் ராஜேஷ் மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை ராஜேஷ் செல்போனிலிருந்து உறவினர்கள் வெளியிட்டனர். அதில் ராஜேஷ் போக்குவரத்து காவலர்கள் ஆபாசமாக திட்டியதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ரயில் முன் பாய்ந்து ராஜேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை முறையாக விசாரிக்கவில்லை என தாம்பரம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராமுத்தாய் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ரயில்வே கண்காணிப்பாளர் ரோகித் நாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் கலையரசி இடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தை மேற்கு சென்னை காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் ராஜேஷ் வீடியோவில் குறிப்பிட்டுள்ள போக்குவரத்துக் காவலர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் தயாரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சம்பந்தப்பட்ட அந்த ஐடி பெண் ஊழியரை திருமங்கலம் காவல் நிலையத்தில் இணை ஆணையர் விசாரணை செய்து வருகிறார். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவலர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அந்தப்பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.