பராமரிப்பு பணி: சென்னையில் 67 மின்சார ரயில் சேவை மாற்றம்!

பராமரிப்பு பணி: சென்னையில் 67 மின்சார ரயில் சேவை மாற்றம்!
பராமரிப்பு பணி: சென்னையில் 67 மின்சார ரயில் சேவை மாற்றம்!
Published on

பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையில் 67 மின்சார ரயில்களின் சேவை நேரம் மாற்றப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய 38 ரயில்களின் சேவை இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்கு பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் சேவை, மதியம் 2 மணிக்கு தொடங்கும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவைகளும், காலை 10.45 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

பயணிகளின் நலன் கருதி பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத் துக்கு சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com