"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!

"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
Published on

சிறு குறு தொழில்களை பாதிக்கப்பட்டுள்ளதை நாடாளுமன்றத்தில் பேசுமாறு கூறிய தொழிலதபருக்கு ஆறுதலான வார்த்தைகளையும் நம்பிக்கையையும் தெரிவித்தார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி.

ராகுல் காந்தி தமிழ்நாட்டில் 3 நாட்கள், கோவையில் துவங்கி, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த 3 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கோவை வந்த ராகுல் காந்திக்கு சிட்ரா-காளப்பட்டி சந்திப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொழில் அமைப்பினருடனான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய சிறு குறு தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் "நான் எனக்காக பேசவில்லை. சிறு குறு தொழில் கூட்டமைப்பின் சார்பாக பேசுகிறேன். நாம் முதலில் ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இந்தியா, தற்சார்பு இந்தியா என தொடங்கி இப்போது நிதி இந்தியாவில் வந்து நிற்கிறோம். வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறோம். ஆனால் நாம் இப்போது எங்கு இருக்கிறோம்? தொழிலதிபர்கள் போராடுகிறார்கள்" என்றார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is the outcome of Modi Govt’s policy to crush people’s hopes &amp; needs and work only for a few crony capitalists. <a href="https://t.co/rPcdqAobQz">pic.twitter.com/rPcdqAobQz</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1352915776848621568?ref_src=twsrc%5Etfw">January 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும் "இந்தியாவில் 7 கோடி தொழில் முனைவோரில் 30 சதவிதத்தினர் இப்போது தொழிலையே விட்டுவிட்டனர். மிக முக்கியமாக சிறு குறு தொழில்முனைவோர்கள், இதனால் 2.1 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலை இல்லாமல் இருக்கிறேன். இப்போது தொழில்முனைவோருக்கு பணம் பிரச்னை, வேலை ஆட்கள் இல்லாதது, மூலப்பொருள்கள் தட்டுப்பாடு. எங்களை வங்கிகள் கடனை வசூலிக்க பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. செய்தித்தாள்களை திறந்தாலே பயமாக இருக்கிறது. பல நிறுவனங்கள் ஜப்தி செய்திகள், விளம்பரங்கள்தான் இருக்கிறது" என்றார் ரகுநாதன்.

தொடர்ந்து பேசிய அவர் "நாட்டில் 98 சதவிதத்துக்கு சிறு தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். இதற்கென தனி அமைச்சரவை வேண்டும். பெரிய தொழில்நிறுவனங்களுடன் எங்களை சேர்க்க முடியாது. இவர்கள் எல்லாம் சுயமாக தொழில்முனைவர்கள். இப்போது தொழில்முனைவோரை இழந்து வருகிறோம். ஒரு தொழில்முனைவோரால் வெளிப்படையாக அழ முடியாது. ஆனால் அனைவரும் அழுதுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள்" என்றார் ரகுநாதன்.

இதற்கு பதிலளித்த பேசிய ராகுல் காந்தி "உங்களது கோரிக்கையை நான் முழுவதுமாக ஏற்கிறேன். சிறு குறு தொழில்களை பலப்படுத்தாமல் தேசத்தை வலுவாக்க முடியாது. நாங்கள் இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் என்னிடம் உங்களது பிரச்னையை கூறுங்கள். உங்களுடன் இணைந்து பணியாற்ற பிரச்னையை தீர்க்க தயாராக இருக்கிறேன். நிச்சயம் உங்களுக்காக குரல் கொடுப்பேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com