வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்... ராகவா லாரன்‌ஸ்

வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்... ராகவா லாரன்‌ஸ்
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்... ராகவா லாரன்‌ஸ்
Published on

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீது வழக்குகள் பதியப்படாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் முதலமைச்சரிடன் வலியுறுத்தி இருப்பதாகதெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் அல்லது வன்முறையை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமற்ற செயல் எனவும் ராகவா லாரன்‌ஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com