மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் முடித்துவைத்துள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், கட்சிகள் பரப்புரையை தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணியில் காங்கிரஸைத் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதேபோல் அதிமுக கூட்டணியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
பாஜக கூட்டணியில் பாமகவில் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதுச்சேரி உட்பட பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி,
தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை - வினோத் பி செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (கூட்டணி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
கோவை - அண்ணாமலை
நீலகிரி - எல்.முருகன்
பெரம்பலூர் - பாரிவேந்தர் (கூட்டணி)
தூத்துக்குடி - நைனார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சமீபத்தில் பாஜகவில் கூண்டோடு இணைந்த சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டியிடுகிறார்.
அந்த இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பின் வருமாறு,
திருவள்ளூர் - பால கணபதி
சென்னை வடக்கு - பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் - கே.பி ராமலிங்கம்
திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்த ராஜன்
கரூர் - செந்தில்நாதன்
சிதம்பரம் - கார்த்தியாயினி
நாகை - ரமேஷ்
தென்காசி - ஜான் பாண்டியன்
தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
மதுரை - ராம சீனிவாசன்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
மற்றும்
புதுச்சேரி - நமச்சிவாயம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் தமிழகத்தில் 3 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விருதுநகரில் ராதிகாவை எதிர்த்து விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தேமுதிக சார்பில் களம் காண்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே, விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பாஜக வேட்பாளராக வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி விலகிய நிலையில், அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கும் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.