தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளாவில் டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா ப்ளஸ் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானவர் சென்னையைச் சேர்ந்தவரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.