மழை காலத்தை எதிர்கொள்வதற்காக 115 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை எழிலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “மழை காலத்தை எதிர்கொள்வதற்காக கட்டப்பட்டு வரும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் 115 மையங்கள் தயாராக உள்ளன. மீட்பு மற்றும் முதலுதவி வழங்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை வரவேற்று ஏதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவருகிறது.” என்று கூறினார்.