பேக்கரும்பு மணி மண்டபத்தில் அப்துல் கலாமின் சிலை அருகே குரானும், பைபிளும் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால், அவை இரண்டும் அகற்றப்பட்டன.
பிரதமர் மோடி கடந்த 27-ஆம் தேதி திறந்துவைத்த கலாம் நினைவு மண்டபத்தில் அவரது சிலை அருகே பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது. இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரிதும் போற்றிப் பின்பற்றி நடந்ததாக கலாமே கூறிய உலகப் பொதுமறையாம் திருக்குறளை அவரது சிலை அருகே வைத்திருக்கலாமே? என்று அவர்கள் கூறினர். திருக்குறளைவிட பகவத் கீதை உயர்ந்ததா? என்றும் அவர்கள் வினவியிருந்தனர்.
இதன் எதிரொலியாக, கலாமின் சிலை அருகே அவரது சகோதரர் முத்து மரைக்காயரின் பேரன் சலீம் இன்று குரானையும், பைபிளையும் வைத்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து குரானும், பைபிளும் அகற்றப்பட்டு பேழையில் வைக்கப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அவை இரண்டையும் வீணையின் அருகிலிருந்து அகற்றியதாக சலீம் தெரிவித்துள்ளார்.