பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. சில இடங்களில் அந்தத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதிநிலை தரக் கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொங்கல் தொகுப்பு வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடி குறித்து அவர் முதல்வரிடம் விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.