கன்னியாகுமரி: குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 2 மலைப்பாம்புகளை பிடித்த இளைஞர்கள்

கன்னியாகுமரி: குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 2 மலைப்பாம்புகளை பிடித்த இளைஞர்கள்
கன்னியாகுமரி: குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 2 மலைப்பாம்புகளை பிடித்த இளைஞர்கள்
Published on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடியிருப்புப் பகுதிக்குள் வலம் வந்த 10 அடி நீளமுள்ள இரு மலைப்பாம்புகளை பிடித்த இளைஞர்கள் அவற்றை பொன்மனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெட்டிகோணம் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையே சில தினங்களாக மலைப்பாம்பு ஒன்று வலம் வந்திருக்கிறது. இதனைக்கண்டு குடியிருப்புவாசிகள் அச்சமடைந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று குடியிருப்புப் பகுதியில் உள்ள புதருக்கிடையே பதுங்கி இருந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர்.

இதேபோன்று திங்கள்நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட மற்றொரு  மலைப்பாம்பும் அப்பகுதி இளைஞர்களிடம் பிடிப்பட்ட நிலையில் இரு மலைப்பாம்புகளையும் தக்கலை புலியூர்குறிச்சி பல்லுயிர் பூங்காவில் இளைஞர்கள் ஒப்படைத்தனர். அங்கிருந்து இரு பாம்புகளையும் கைப்பற்றிய பொன்மனை வனத்துறையினர் அவற்றை பெருஞ்சாணி அணை அருகே உள்ள வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் மழைக்காலங்களில் அணைகள் திறக்கும்போது காட்டாற்று வெள்ளத்தில் மலைப்பாம்புகள் சிக்கி அடித்து வரப்படுவதாகவும் அவை குடியிருப்புப்பகுதியில் புகுந்து விடுவதாகவும், கடந்த ஆறு மாதத்திற்குள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு  குடியிருப்புப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் சிக்கியதாகவும் அவற்றை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com