தென்காசி|புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி.. உற்சாகமூட்டிய மாணவர்களின் படைப்புகள்

தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில், 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் சுமார் 300 க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சிpt web
Published on

“ஏன் எதற்கு என்ற கேள்விகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கான விதை. புதிய தலைமுறை ஏற்படுத்தி கொடுத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மிகப்பெரிய சாதனையாளர்களாய் மாறுங்கள்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி துவங்கியது. காலை முதலே அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவ மாணவிகள் தங்கள் படைப்புகளுடன் கல்லூரியில் குவியத் தொடங்கினர். அதேபோல், ஆர்வமுடன் பல்வேறு படைப்புகளை கொண்டுவந்தனர். இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் சுமார் 300 க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் , கல்லூரி சேர்மன் புதியபாஸ்கர், தாளாளர் கல்யாணி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
"இருதய பாதிப்பால் சிகிச்சை பெறுகிறேன்.." - சவுக்கு சங்கர் மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய பள்ளி சேர்மன் புதிய பாஸ்கர், புதிய தலைமுறை தொலைகாட்சி சிறப்பான முறையில் வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியை நடத்திவருவதாகவும் பேசினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பேசும் போது, “ஏன் எதற்கு என்ற கேள்விகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கான விதை, புதிய தலைமுறை ஏற்படுத்தி கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகப்பெரிய சாதனையாளர்களாய் மாறுங்கள்” எனப் பேசினார். மேலும், மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் காவல் துறை அனைத்து உதவிகளை செய்ய தயாராக உள்ளது எனவ தெரிவித்தார். மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்புகள் மெய்சிலிர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் ஆச்சரியமுட்டுவதாகவும் தெரிவித்த அவர் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான 5 வேண்டுகோள்களையும் முன் வைத்தார்.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
கிரைம் த்ரில்லராக வெளிவரும் ’ககன மார்கன்’ - இசை, நடிப்பு இரண்டிலும் இறங்கி அடிக்கும் விஜய் ஆண்டனி!

பின்னர் மாணவ மாணவிகள் படைப்பை காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார். அப்போது, ஹெல்மெட் இருந்தால் மட்டுமே ஸ்டார்ட் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்ட படைப்பை உருவாக்கிய மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

புதிய தலைமுறையின் இந்த நிகழ்ச்சியில் அரசு , தனியார் பள்ளி மாணவ மணவிகள் ஆர்வத்தை பார்த்து தங்கள் கல்லூரியில் அதனை நடத்த மேலும் மேலும் ஆர்வத்தை கூட்டுவதாகவும், இந்த வாய்ப்பை வழங்கும் புதிய தலைமுறையுடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்குவதில் பெருமை கொள்வதாகவும் கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர் , கல்லூரி தாளாளர் கல்யாணி ஆகியோர் தெரிவித்தனர்

புதிய தலைமுறை தொலைகாட்சி நடத்திய இந்த நிகழ்வில் கலந்து கொண்டதால் தங்கள் படைப்பை வெளிக்கொணர மட்டுமல்லாமல் இங்கு வைக்கப்பட்டுள்ள பல படைப்புகளை பார்த்து அதில் பல விஷயங்களை கற்று கொண்டதாகவும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
வயதாகும் வேகத்தை குறைக்க பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச் செய்த அமெரிக்க தொழிலதிபர்! அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com