மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் புதிய தலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள SFS மேல்நிலைப்பள்ளியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு ஷண்முகம் மற்றும் பள்ளியின் முதல்வர் ஜான் ததேயுஸ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த க்கும் 400 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தங்களது அறிவியல் கண்கட்சியை காட்சிப்படுத்தினர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இளநிலை பிரிவில் வைரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அன்புராஜா குமரன் நல்லன் மற்றும் ஆர்யா பிரணிஷ் இணை முதல் பரிசினை வென்றனர்.
முதுநிலை பிரிவில் மவுண்ட் ஜியான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் S.R.விஷால் பாலாஜி மற்றும் S. கார்த்திக் ராஜா இணைந்து முதல் பரிசினை வென்றனர்..
முதல் மூன்று இடங்களை பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.