புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கலப்பட மதுபானங்கள் விற்றவர்கள் கைது

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கலப்பட மதுபானங்கள் விற்றவர்கள் கைது
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கலப்பட மதுபானங்கள் விற்றவர்கள் கைது
Published on

ஓமலூர் அருகே கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்த பெண்கள் உள்பட ‌‌10 பேர் ‌கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய நகர பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் மொத்தம் 16 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளில் நாள்தோறும் லட்சக்கணக்கில் மதுபானம் விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் ஓமலூர் வட்டார பகுதிகளில் மூடப்பட்ட மதுக்கடைகளின் கிராமப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் சந்துகடைகள் அதிகரித்துள்ளன. 

இந்த சந்துக்கடைகளில், டாஸ்மாக் மதுக்கடையில் மொத்தமாக வாங்கி வரப்படும் மது அதிக போதைக்காக கலப்படப்படம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கபடுகிறது. இதுபோன்று ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தொளசம்பட்டி ஆகிய காவல் நிலையப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், எந்தவித தடையும் இன்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வீடுகள், டீ கடைகள், முட்புதர்கள் உள்ளிட்ட இடங்களிலும் சட்டவிரோத சந்துகடைகள் அமைத்து கலப்பட மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்ததை, நமது புதிய தலைமுறை குழு நேரடியாக படம் பிடித்து செய்திகள் வெளியிட்டது. இதனை தொடர்ந்து ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் சட்டவிரோதமாக மது விற்போரை கைது செய்ய, நேரடி மேற்பார்வையில் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த அமுதா, சம்பூரணம், ராஜாம்மாள் ஆகிய மூன்று பெண்களும், பொட்டியபுரம் தங்கராஜ், திமிரிகோட்டை சிவகுமார், ஓமலூர் ஆட்டோ குமார், தாசநாயக்கன்பட்டி சுந்தரவேல், வீரக்கல் கோபிகிருஷ்ணன், சீனிவாசன், கோழிஞ்சியப்பன் ஆகிய 10 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com