Election with PT | களத்தில் உங்களுடன்.. புதிய தலைமுறை தேர்தல் சிறப்புப் பேருந்தில் இவ்வளவு விஷங்களா!

'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில், 'தேர்தல்னா புதியதலைமுறை' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் சுற்றி வருகிறது புதிய தலைமுறையின் தேர்தல் பேருந்து.
களத்தில் உங்களுடன் புதிய தலைமுறை
களத்தில் உங்களுடன் புதிய தலைமுறைpt web
Published on

உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பெருவிழாக்களில் ஒன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவைக் கொண்டாடி வருகிறது புதிய தலைமுறை. இதற்காக தொலைக்காட்சியில் உள்ள எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் வகையில் சிறப்புப் பேருந்து ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில், 'தேர்தல்னா புதியதலைமுறை' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் சுற்றி வருகிறது புதிய தலைமுறையின் தேர்தல் பேருந்து.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளுக்கும் இப்பேருந்து பயணிக்கும். இதில் நேரலை செய்யக்கூடிய கருவிகள், செய்தி அறை, விவாத அரங்கு என எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தென் தமிழகத்திலேயே பேருந்து ஒன்று, தொலைக்காட்சியாக மாற்றுரு பெற்றிருப்பது இதுவே முதல்முறை! அதுதான் புதிய தலைமுறை.

பயண வழியெங்கும் நடைபெறும் அரசியல் கட்சியினரின் பரப்புரைகள், தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள், நடுநிலையாளர்களின் அலசல்கள், என 360 டிகிரி கோணத்திலும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும், எதார்த்த விமர்சனங்களையும் பதிவு செய்யும் 'மக்களுடன் புதிய தலைமுறை', முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தைப் படம் பிடிக்கும் ‘முதல் தலைமுறையுடன் புதிய தலைமுறை(18+)', தொகுதி வேட்பாளர்கள், கட்சித் தலைவர்களின் தேர்தல் வியூகம், கொடுத்த வாக்குறுதிகள் என மக்களின் மனசாட்சியாய் நின்று கேள்வி எழுப்பும் 'தலைவர்களுடன் புதிய தலைமுறை' போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன. செய்தி அரங்கில் இருந்து ஒளிபரப்பப்பட்ட நேர்படப் பேசு நிகழ்ச்சி, தேர்தல் களத்தில் மக்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நாள்தோறும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளும் அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை அனைத்தையும் சாத்தியப்படுத்துவது, புதிய தலைமுறையின் புதிய முன்னெடுப்புகளும், அதை வெற்றிகரமாக செயல்படுத்தும், புதிய தலைமுறை நெறியாளர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்களும் தான். இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க புதிய தலைமுறைக்கான தேர்தல் பேருந்து வடிவமைப்பதில் இருந்த சிரமங்கள், பேருந்தில் உள்ள சிறப்பம்சங்கள், அதற்காக செய்யப்பட்ட விஷயங்கள், அதன் பின்னணியில் உள்ள கதைகளை கேட்பதற்கும் ஆவல் ஏற்படும். அனைத்திற்கும் மேலாக பேருந்திற்காக உழைத்தவர்கள் போன்றோரை மக்களுக்கு அடையாளம் காட்டுவதும் நம் கடமை. அதையும் புதிய தலைமுறை செய்துள்ளது. கீழ்காணும் வீடியோவில் பேருந்திற்காக உழைத்தவர்களது கருத்துக்களும், பேருந்தில் உள்ள சிறப்பம்சங்கள் என அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com