பேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் !

பேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் !
பேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் !
Published on

புதுக்கோட்டையில் பெய்த மழை அரசுப்பேருந்தில் இருக்கும் ஓட்டை வழியாக உள்ளேயும் பெய்ததால் பயணிகள் குடை பிடித்துச்சென்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து 300ற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பேருந்துகள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர். அத்துடன் பல பேருந்துகளில் மேற்கூறைகள் முற்றிலும் சிதைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பேரவூரணியில் இருந்து புதுக்கோட்டை வந்த அரசு பேருந்தின், மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே பெய்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

சில பயணிகள் தங்கள் உடைமைகளை கையில் பிடித்துவாறு நின்றுகொண்டே சென்றனர். சிலர் பாதிவழியிலேயே இறங்கி வேறு பேருந்தில் பயணத்தை தொடர்ந்தனர். சிலர் பயணக்கட்டணத்தை திருப்பித்தருமாறு கேட்டு நடத்துனருடன் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கையில் குடை பிடித்தவாறு சிலர் பயணித்தனர். இந்த நிலை பார்த்தப்பதற்கு நையாண்டி போல் இருந்தாலும், இதுதான் அரசுப்பேருந்துகளின் அவலநிலை என சில பயணிகள் வேதனை தெரிவித்தனர். அத்துடன் அரசு பேருந்துகள் இந்த அளவிற்கு மோசமான நிலையில் இயக்கப்படுவது, அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட பணிமனைகளில் உள்ள பழுதடைந்த பேருந்துகளை சரிசெய்து, பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com