புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாள் விழாவை கிராம மக்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செரியலூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் அருள்வேந்தன். கடந்த ஓராண்டுகளாக செரியலூர் கிராமத்தில் பணியாற்றிவரும் அருள் வேந்தன், பொதுமக்களிடம் கையூட்டு பெறாமல் நேர்மையாக பணியாற்றி வருவதாக தெரிகிறது.
பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற அருள்வேந்தனின் பிறந்தநாள் இன்று என்பதை அறிந்த அக்கிராம மக்கள், கேக் வாங்கி வந்து அதனை கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து வெட்டி பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடினர். மேலும், அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தனர்.