புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயத்தில் மாடுகள் சீறிப்பாய்ந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
புதுக்கோட்டை அருகே கைகுறிச்சி கிராமத்தில் உள்ள காளியம்மன், சுந்தர விநாயகர், பொற்பனை முனீஸ்வரர் ஆகிய கோயில்களின் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சனம் நடைபெற்றது.
இதில், 8 மைல் தொலைவிற்கு கைகுறிச்சியில் இருந்து குளவாய்ப்பட்டி வரையில் நடைபெற்ற பெரிய மாட்டுவண்டி பந்தையத்தில் மொத்தம் மாட்டு வண்டிகள் பங்கேற்றன. புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் போட்டி போட்டுக்n காண்டு மாடுகள் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்டுத்தியது.
இதில் கட்டுமாவடி அடைக்கலம் என்பவரின் மாட்டுவண்டி முதல் இடத்தையும், பொய்யாதநல்லூர் அயன் அசலாம் மாட்டுவண்டி இரண்டாம் இடத்தையும், தினையக்குடி சிவா மாட்டுவண்டி மூன்றாம் இடத்தையும், நெம்மேனிக்காடு துளசிராமன் மாட்டுவண்டி நான்காம் இடத்தையும் பிடித்தது.
இதேபோல் 14 மாட்டு வண்டிகள் பங்கேற்ற 6 மைல் தொலைவு போட்டியில், மாவிளங்காவயல் சுரேஷ் மாட்டுவண்டி முதல் இடத்தையும், மாவூர் ராமச்சந்திரன் மாட்டுவண்டி இரண்டாம் இடத்தையும், தட்டன்வயல் பிரசாத் மாட்டுவண்டி மூன்றாம் இடத்தையும், கடையாத்துப்பட்டி கமலேஷ் மாட்டுவண்டி நான்காம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றன. இதையடுத்து முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது.