அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு என்ற மாநில அரசின் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 5 மாணவ-மாணவியர் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அன்னவாசல் அருகேயுள்ளது இந்த வயலோகம் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்களில் ஐந்து பேர் நீட் தேர்விலும், ஒருவர் ஜே.இ.இ தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். முயற்சித்தால் முடியாதது இல்லை என்கின்றனர் இந்த மாணவர்கள்...
இது குறித்து தலைமை ஆசிரியர் ஜெயராஜ் கூறுகையில் “தங்கள் பள்ளியில் கோடை விடுமுறை மட்டும் தான் விடுமுறையாக இருக்கும் மற்ற நாட்களில் எப்போதும் சிறப்பு வகுப்புகள் இருக்கும்” என்கிறார்.
ஏழை-எளிய, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் பயின்று தங்களின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சாதித்துள்ள இந்த மாணவர்களை ஊருலகம் வாழ்த்தட்டும்.