“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம்

“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம்
“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம்
Published on

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அந்தப் பெண் காவலரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை நடப்பதாக கூறி ஆசிரமத்தை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்‌‌‌டார். இதில் அவரது தாய் மற்றும் சகோதரிகள் நீரில் மூழ்கி இறந்தனர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார் ஹேமலதா. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆளுநர் மாளிகை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு காவலரின் கையை கடித்துவிட்டு ஒட முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஹேமலதாவை பெரியகடை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com