காஞ்சிபுரம்: குளங்கள் நிரம்பி சாலைகளில் தேங்கும் நீரால் சுகாதார கேடு - பொதுமக்கள் வேதனை

காஞ்சிபுரம்: குளங்கள் நிரம்பி சாலைகளில் தேங்கும் நீரால் சுகாதார கேடு - பொதுமக்கள் வேதனை
காஞ்சிபுரம்: குளங்கள் நிரம்பி சாலைகளில் தேங்கும் நீரால் சுகாதார கேடு - பொதுமக்கள் வேதனை
Published on

காஞ்சிபுரம் அருகே குளங்கள் நிரம்பி சாலையில் புழுக்களுடன் தேங்கி நிற்கும் நீரினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக நீர்தேக்கங்களான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள வள்ளி அம்மன்குளம் மற்றும் சங்கரன்குளம் என்கிற இரு குளங்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிரம்பி அதிலிருந்து வழியும் நீரினால் அக்கிராமத்தின் முக்கிய சாலையில் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்று கொண்டிருக்கிறது. மேலும் அக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதுடன் புழுக்கள் உற்பத்தியாகி அதிக அளவில் தூர்நாற்றம் வீசி வருகின்றன.

மேலும் அந்நீரானது இக்கிராமத்தின் நியாயவிலை கடை, ஒன்றிய நடுநிலை பள்ளி, அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதிகளில் தேங்கி நிற்பதால் அந்நீரிலேயை கால்வைத்து சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் கடந்து சென்று வருகின்றனர். போதிய வடிகால் வசதியின்றி தேக்கம் அடைந்துள்ள அந்நீரினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அக்கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் குறைதீர்ப்பு நாளில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையை அக்கிராம மக்கள் முன்வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com