நெல்லை: குழாய் உடைந்ததால் சாலையில் ஆறுபோல் ஓடும் குடிநீர்... சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை: குழாய் உடைந்ததால் சாலையில் ஆறுபோல் ஓடும் குடிநீர்... சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை: குழாய் உடைந்ததால் சாலையில் ஆறுபோல் ஓடும் குடிநீர்... சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
Published on

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக சாலையில் குடிநீர் வீணாக செல்வதால் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிதண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி மூலம் குடிதண்ணீர் கொக்கிரகுளம் பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குடிதண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் தண்ணீர் இரவு பகலாக சாலையில் வீணாக செல்கிறது. இதனால் கொக்கிரகுளம் பகுதிக்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிதண்ணீர் இல்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு வருவதால் உடைந்த குழாயை சரி செய்து தங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடி தண்ணீர் வரவில்லை என கொக்கிரகுளம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com