சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கி வருகிறோம் - ஈஷா அறக்கட்டளை

சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கி வருகிறோம் - ஈஷா அறக்கட்டளை
சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கி வருகிறோம் - ஈஷா அறக்கட்டளை
Published on

சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கி வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த சவாலான சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்தது.

அதன்படி, சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் பணியாற்றும் 400 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், ஸ்டான்லி மருத்துவமனை பணியாளர்களுக்கும் சேர்த்து 6,900 சிற்றுண்டி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

அதேபோல், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு 20,520 சிற்றுண்டி பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. மேலும், திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன. தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஓரிரு தினங்களில் வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, புதுச்சேரியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்டுகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நேரில் வழங்கப்பட்டது. இது தவிர, கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com