அதிமுக ஆட்சிபோல அமைப்புசாரா, நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குக: இபிஎஸ் கோரிக்கை

அதிமுக ஆட்சிபோல அமைப்புசாரா, நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குக: இபிஎஸ் கோரிக்கை
அதிமுக ஆட்சிபோல அமைப்புசாரா, நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குக: இபிஎஸ் கோரிக்கை
Published on

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உணவுத்தொகுப்பு மற்றும் ருபாய் 2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிமுகவை பொறுத்தவரை மக்கள்நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள்& 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ருபாய் 2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும். எனது தலைமையிலான  அரசு வழங்கியதை போன்று ஏழைகள் , மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் , கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும்.

தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். அதிமுக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com