டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த எம்எல்ஏ

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த எம்எல்ஏ
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த எம்எல்ஏ
Published on

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுடன் மக்களாக சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜூம் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டதன் எதிரொலியாக, தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதேபோல் மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடைக்கு மாற்றாக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் சந்திப்பில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை இன்று திறக்கப்பட்டுள்ளது. காலை 12 மணிக்கு கடை திறக்கப்பட்டாலும் அதற்கு முன்பே அதுகுறித்த தகவல் கிடைத்ததால் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 8 மணி முதல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். நல்ல முடிவு வரும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இதனிடையே, போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் போலீசாரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக சாமலாபுரம் சந்திப்பில் 3 பக்கமும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com