அரியலூரில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதா மரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரையும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணசாமியைக் கண்டித்து திமுக சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிருஷ்ணசாமியின் உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து எரித்து திமுகவினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.