சென்னை மெரினா கடற்கரையில் வெளிநபர்களுக்கு கடைகளை ஒதுக்குவதால், ஏற்கெனவே கடை வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகக்கூறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரையில் உள்ள சிறு கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக, ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்காக 2 ஆயிரம் வியாபாரிகளை கண்டறிந்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்டமாக 900 கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு 60 விழுக்காடு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 40 விழுக்காடு கடைகள் வெளி நபர்களுக்கு ஒதுக்கப்படுவதாகக் கூறி, வியாபாரிகள் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.