சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டமசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்.
கள்ளக்குறிச்சி விஷசாராய மரண வழக்கு தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், ”உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான மசோதா திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படவுள்ளது.