பெட்ரோல் , டீசல் விலை இன்னும் சில நாட்களில் ரூ.100 ஐ தொட்டு விடும் நிலையில் உள்ளது. சில இடங்களில் பெட்ரோல் ரூ.90க்கு விற்கப்படுகிறது , தமிழகத்தில் ரூ84க்கு விற்கப்படுகிறது. தினமும் பெட்ரோல் விலை ஏறினாலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அமைச்சரும் டாலர் மதிப்பு உயர்வதால் பெட்ரோல் விலை உயர்கிறது என கூறினார். இதிலிருந்து ரூபாய் மதிப்பு மீளும் வரை எந்த நடவடிக்கையும் இருக்க போவதில்லை என தெரிகிறது.
Read Also -> தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலை நிர்ணயம் எப்படி செய்யப்படுகிறது
நிலை 1 : கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்பதே அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கிறது. ஒரு பேரல் விலை / பேரலில் இருந்து கிடைக்கும் பெட்ரோல் விலை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது.
நிலை 2 : சுத்திகரிப்பு - கச்சா எண்ணெயை அப்படியே பயன்படுத்த முடியாது. அதனை சுத்திகரிப்பு செய்து உப பொருளான பெட்ரோல், டீசல், தார் போன்றவை பெறப்படுகிறது. இதற்கு ஆகும் செலவும் சேர்க்கப்படுகிறது
நிலை 3 : கலால் வரி ( மத்திய அரசு வரி ) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செல்வை ஈடு கட்டுவதற்காக கலால் வரி விதிக்கப்படுகிறது.
நிலை 4 : டீலர் கமிஷன் ( முகவர் தரகு விலை) - வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம் ; ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ3 வரையில் டீலர் கமிஷன் இருக்கும்
நிலை 5 : வாட் வரி - மதிப்பு கூட்டு வரி - மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வரி
Read Also -> 'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்
எடுத்துக்காட்டாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு எல்லாம் செய்யப்பட்டு பெட்ரோலாக மாற்றிய பின்னர் அதன் விலை ரூ.37 , அதில் சேர்க்கப்படும் கலால் வரி ரூ.19 , டீலர் கமிஷம் ரூ3, மாநில அரசின் வாட் 16. மொத்தம் ரூ.75 ; இப்போது தினசரி மாற்றம் செய்யப்படுவதால் விலையில் தொடர்ந்து மாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது.