தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
Published on

தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. 

லாரிகளின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, வருவாய்த்துறையும், காவல்துறையும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டிருந்தனர். இதுபோன்ற அணுகுமுறையைக் கைவிடவும், தண்ணீர் எடுக்க முறையாக உரிமம் வழங்க வேண்டும் என்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர். 

நிலத்தடி நீரை கனிமவளத்திலிருந்து பிரித்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கினர். தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் தண்ணீர் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னையில் மட்டும் 4,500 வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. போராட்டத்தால், 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நிலத்தடி நீர் எடுக்க முறையான அனுமதி உள்ளிட்ட லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்பாக பேசப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com