திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள் மாற்றுச்சான்றிதழ் பெற்று சொந்த ஊர் திரும்பினர்.
கடந்த மாதம் 25-ஆம் தேதி கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான முதற்கட்ட விசாரணை நிறைவுற்ற நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள் தங்களது மாற்றுச்சான்றிதழ்களை பெற்று சொந்த ஊருக்கு சென்றனர். பெற்றோர் சம்மதத்துடனே மாற்றுச்சான்றிதழ் பெறப்பட்டதாக மாவட்ட கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! மற்றவர்கள் நிலை?