தனியார் பேருந்துகளிலும் இனி படமும், பாட்டும் இல்லை

தனியார் பேருந்துகளிலும் இனி படமும், பாட்டும் இல்லை
தனியார் பேருந்துகளிலும் இனி படமும், பாட்டும் இல்லை
Published on

தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு சாதனங்களை பயன்படுத்துவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பொதுவாக தனியார் பேருந்துகளை விரும்புவர். தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்களுக்கு தனியார் பேருந்துகளின் மீது ஒரு மோகம் உள்ளது. அதற்கு காரணம் விரைவாக செல்வது, பயணத்தின் போது படம் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதால் பயண களப்பின்றி செல்லாம் என்ற எண்ணம்தான். ஏனென்றால் அரசு பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இனி தனியார் பேருந்துகளிலும் தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது, பாடல்களை கேட்பது போன்ற வசதிகளை அனுபவிக்க முடியாது.

அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவினருடன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சுமார் 7 ஆயிரம் பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்கள் நீக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com