ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கொரோனா பரவலை தடுக்க மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டது.
தற்போது தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை ஜூலை 31 வரை இயக்கப்படாது. தமிழக அரசின் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.