”கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் துணை முதல்வர் ஓ.பிஎஸ்.
அவர், வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சென்னை மீனம்பாக்கம் முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 15 கிலோமீட்டருக்கான சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு 6500 ரூபாயும், ஆக்சிஜன் வசதியுடைய ஆம்புலன்ஸ்களுக்கு 9000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஏழை மக்களின் சூழ்நிலையை சாதகமாகக் கொண்டு கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு நிர்ணயத்த கட்டணமே தமிழகம் முழுக்க உறுதிசெய்ய தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கண்டனங்களுடன் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.