கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் விசாரணைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கவுந்தபாடி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. குன்னத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கைதான கணபதி, கடந்த 26 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு வந்தவர் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28ஆம் தேதி சிறை அறைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறை மருத்துவமனையில் துண்டால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார். கோவை மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அளித்தப் புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் நடந்த மரணம் என்பதால் நீதிபதி விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் அளித்த பின்பே உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.